'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி 1 May 2023 2:30 AM IST (Updated: 1 May 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மரத்தால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு

நிலக்கோட்டையில் இருந்து வத்தலக்குண்டு செல்லும் சாலையில் நூத்தலாபுரம் பிரிவு அருகே பட்டு போன நிலையில் ஒரு மரம் உள்ளது. இந்த மரம் எப்போது வேண்டு மானாலூம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக உள்ளது. எனவே விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள மரத்தை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.

-ரதிஷ்பாண்டியன், பொம்மணம்பட்டி.

சேதமடைந்த படிக்கட்டுகள்

திண்டுக்கல் பஸ்நிலையத்தில் தெற்கு பகுதியில் உள்ள படிக்கட்டுகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இந்த படிக்கட்டுகளின் கட்டுமான கம்பிகளும் வெளியில் தெரிவதால் பொதுமக்கள், முதியவர்கள் படிக்கட்டுகளில் ஏறி, இறங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். பொதுமக்கள் தினமும் பயன்படுத்தும் படிக்கட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முனியாண்டி, ஓய்.எம்.ஆா்.பட்டி.

தெருவிளக்குகள் எரியவில்லை

திண்டுக்கல் அருகே பெரியகோட்டை கிராமம் கஸ்தூரிநாயக்கன்பட்டியில் உள்ள தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் இரவு நேரத்தில் பெண்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும்.

-லிங்கம், கஸ்தூரிநாயக்கன்பட்டி.

தூர்வாரப்படாத சாக்கடை கால்வாய்

போடி மேலச்சொக்கநாதபுரத்தை அடுத்த பி.ரெங்கநாதபுரம் பஸ் நிறுத்தம் அருகே சாக்கடை தூர்வாரப்படாமல் இருக்கிறது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதாரகேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை விரைவில் தூர்வார வேண்டும்.

-கிராம மக்கள், மேலச்சொக்கநாதபுரம்.

தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகள்

திண்டுக்கல் அருகே யாகப்பன்பட்டி வெள்ளோடு சாலையில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அவற்றை சிலர் தீ வைத்து எரித்துவிடுகின்றனர். இதனால் அந்த சாலை புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. அப்போது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் உள்ளிட்டவைகள் ஏற்படுகிறது. எனவே, சாலையோரத்தில் குப்பைகளை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரோஜாபிரியன், திண்டுக்கல்.

சேதமடைந்த சாலை

வருசநாடு அருகே பசுமலைத்தேரி முதல் பொன்னன்படுகை வரை உள்ள இணைப்பு சாலை சேதமடைந்து உள்ளது. இந்த இணைப்பு சாலை வழியாக தான் விவசாயிகள் விளைபொருட்களை கொண்டு செல்கின்றனர். சாலை சேதமடைந்து இருப்பதால் உரிய நேரத்திற்கு அவர்களால் பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

-பொதுமக்கள், வருசநாடு.

சிதிலமடைந்த மின்கம்பம்

கடமலைக்குண்டுவை அடுத்த கோவில்பாறை கிராமத்தில் மெயின் தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்துள்ளது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை நட்டு வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஊர்மக்கள், கோவில்பாறை.

காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

இடையக்கோட்டை ஆதிதிராவிடர் காலனியில் காளியம்மன் கோவில் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை அந்த தொட்டியில் நீர் நிரப்பாமல் காட்சி பொருளாகவே இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே மேல்நிலை குடிநீர் தொட்டியை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். -தெருவாசிகள், இடையக்கோட்டை.

சாலையை சூழ்ந்த கழிவுநீர்

கம்பம் வனச்சரகர் அலுவலக சாலையில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் வெளியேறி சாலையை சூழ்ந்துவிட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாயை விரைவில் தூர்வார வேண்டும்.

-ராஜ்குமார், கம்பம்.

ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

கம்பம் பழைய பஸ் நிலைய சாலையை ஆக்கிரமித்து ஷேர் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரியா, கம்பம்.

-----------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Related Tags :
Next Story