புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
ராமநாதபுரம் நகர் சுவாமி விவேகானந்தர் சாலையில் இணையும் பெரிய பள்ளிவாசல் சந்து ரோடு மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடடிவக்கை எடுக்க வேண்டும்.
அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.
உடைந்த குடிநீர் குழாய்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துர் 15-வது வார்டில் பொது வினியோக தண்ணீர் குழாய் உடைந்து தெருக்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசு உருவாகி தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடைந்த குழாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், முதுகுளத்தூர்.
சேதமடைந்த குடிநீர் தொட்டி
ராமநாதபுரம் சிவன்கோவில் தெருவில் உள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதனால் இந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த குடிநீர் தொட்டியை அகற்றி புதிய தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனோகரன், ராமநாதபுரம்.
தேங்கி நிற்கும் மழைநீர்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா பாம்பூர் கிராமத்தில் கிழக்கு தெருவில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பாம்பூர்.
தொற்று நோய் அபாயம்
ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை மகர்நோன்பு திடலில் பாதாள சாக்கடை நிரம்பி கழிநீர் சாலையில் செல்கிறது. இதனால் இந்த பகுதியை கடந்து செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முகம்மது தமீம், கேணிக்கரை.