போதைப்பொருள் தொடர்பாக புகார் அளிக்க போலீஸ் சார்பில் பள்ளிகளில் புகார் பெட்டி


போதைப்பொருள் தொடர்பாக புகார் அளிக்க போலீஸ் சார்பில் பள்ளிகளில் புகார் பெட்டி
x

போலீஸ் சார்பில் பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் போதைப்பொருள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

போலீஸ் சார்பில் பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் போதைப்பொருள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

போதைப்பொருள் பயன்பாடு

குமரி மாவட்டத்தில் போதை பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்களும் கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கத்தில் ஈடுபடுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.

எனவே மாணவர்கள் போதை பழக்கத்திற்கு சென்று விடாமல் தடுக்கவும் போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக பள்ளி, கல்லூரி அருகில் உள்ள கடைகளில் போதைப்பொருள் விற்பனை நடந்தால் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.

புகார் பெட்டி

இந்தநிலையில் போதை பொருட்கள் பயன்பாடு தொடர்பாக புகார் அளிக்க பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க மாவட்ட காவல் துறை முடிவு செய்தது. அதன்படி முதற்கட்டமாக நேற்று எஸ்.எல்.பி. அரசு பள்ளி, கவிமணி பள்ளி மற்றும் 3 தனியார் பள்ளிகள் என மொத்தம் 5 பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

இதில் எஸ்.எல்.பி. அரசு பள்ளியில் புகார் பெட்டியை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேரில் சென்று வைத்தார். பின்னர் அதுதொடர்பாக மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்.

மேலும் இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறுகையில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளை ஒழிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு வங்கி கணக்கும் முடக்கப்படுகிறது. மாணவர்கள் போதைப் பொருள் பயன்பாடு தொடர்பாக புகார் அளிக்க பள்ளிகளில் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இதில் பாலியல் அத்துமீறல் குறித்தும் புகார் மனு அளிக்கலாம் என்றார


Next Story