தரமற்ற தார்சாலை அமைத்ததாக கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு
ஏலகிரிமலையில் தரமற்ற தார்சாலை அமைத்ததாக கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட பா.ஜ.க. பொதுச்செயலாளர் கவியரசு கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
அதில் ஆபத்தான வளைவுகளை கொண்ட ஏலகிரி மலைப்பாதை சாலையை தரமற்றதாக அமைக்கின்றனர். நன்றாக இருக்கும் சாலையை புதிதாக சாலை போடுகிறோம் என்ற பெயரில் ரூ.9½ கோடியில் ஒரு மழைக்குக்கூட தாங்காத அளவுக்கு தரம் இல்லாத சாலையை போட்டு உள்ளார்கள்.
ஏலகிரி மலைக்கு சுற்றுலா வரும் பயணிகள் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் செல்லும்போது மிகவும் அவதிக்கு உள்ளாகி வருவதாக குற்றம் சாட்டுகிறார்கள்.
போடப்பட்டுள்ள தார்சாலை குறித்து ஏலகிரி மலை பொதுமக்களும் புகார் கூறிய வண்ணம் உள்ளனர். உடனடியாக அந்த பகுதியில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் பா.ஜ.க. சார்பில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story