சப்-இன்ஸ்பெக்டருடன் வீடியோ காலில் பேசுவதாக புகார்


சப்-இன்ஸ்பெக்டருடன் வீடியோ காலில் பேசுவதாக புகார்
x

சப்-இன்ஸ்பெக்டருடன் வீடியோ காலில் பேசுவதாக பெண் போலீஸ் மீது கணவர் புகார் அளித்துள்ளார்.

வேலூர்

வேலூர் ரங்காபுரத்தை சேர்ந்த ஒருவர் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், நான் ராணுவத்தில் பணிபுரிந்து தற்போது வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளியாக பணியாற்றுகிறேன். கடந்த 2012-ம் ஆண்டு எனக்கு காதல் திருமணம் நடைபெற்றது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். எனது மனைவி தற்போது வேலூரில் உள்ள போலீஸ் நிலையம் ஒன்றில் முதல்நிலை காவலராக பணிபுரிகிறார். கடந்த சில ஆண்டுகளாக மனைவி வீட்டில் நான் இல்லாத நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருடன் வீடியோ காலில் பேசுகிறார். இதனை கண்டித்தும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார். இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டரிடம் கேட்ட போது உன்னால் முடிந்ததை பார்த்து கொள். நான் வீடியோ காலில் தொடர்ந்து பேசுவேன் என்று கூறுகிறார். இதன்காரணமாக மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகி சரியாக வேலை பார்க்க முடியவில்லை. 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளேன். எனவே மனைவியுடன் வாழ விரும்பில்லை. 2 குழந்தைகளையும் மீட்டுத்தர வேண்டும் என்று கூறியிருந்தார்.


Next Story