ஆரணியில் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி


ஆரணியில் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி
x

ஆரணியில் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை

ஆரணி

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் உத்தரவின்பேரில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் ஆரணி டவுன், களம்பூர், அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கான புகார் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி ஆரணி கொசப்பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.

ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் முன்னிலை வகித்தார். டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் வரவேற்றார். ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே அளிக்கப்பட்ட புகார் மனுக்கள் மீதான விசாரணை நடத்தப்பட்டு, இரு தரப்பினரையும் அழைத்து பேசி மேல்முறையீடு இல்லாதவாறு வழக்குகள் சமரசம் செய்யப்பட்டது.

மேலும் காசோலை மோசடி, அடிதடி, குடும்ப தகராறு உள்பட பல்ேவறு பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் புகார் மனுக்களை கொடுத்தனர். புகார் மனுக்கள் மீது போலீசார் விசாரணை நடத்தினர். நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விநாயகம், கிருஷ்ணமூர்த்தி, மகாராணி, பிரபாகரன், நிர்மல்குமார் மற்றும் போலீசார்கள், வழக்கறிஞர்கள், இருதரப்பு மனுதாரர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story