பனைமரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கைக்கோரி புகார்


பனைமரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கைக்கோரி புகார்
x

பனைமரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கைக்கோரி புகார் மனு அளிக்கப்பட்டது.

கரூர்

க.பரமத்தி ஒன்றியம், தென்னிலை மேற்கு ஊராட்சி புளியம்பட்டியை சேர்ந்தவர் நீலியப்பன். இவர் தனது தோட்டத்திற்கு அருகே 16 பனை மரங்களை வைத்து பராமரித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த 3 பேர் பொக்லைன் எந்திரத்தின் மூலம் 14 பனை மரங்களை வேரோடு சாய்த்து வெட்டி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் நீலியப்பன் அந்த 3 பேரிடம் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் அவர்கள் சேர்ந்து நீலியப்பனை மிரட்டி உள்ளனர். எனவே பனை மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நீலியப்பன் தென்னிலை மேற்கு ஊராட்சி மன்ற தலைவர், புகழூர் வட்டாட்சியர் ஆகியோரிடம் புகார் மனு அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. பனைமரங்களை தற்போது அழிக்க நினைத்தாலோ, வெட்டினாலோ தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story