தானியங்கி புகார் சேவை மையம் திறப்பு
தானியங்கி புகார் சேவை மையம் திறக்கப்பட்டது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. வேதாரண்யம் நகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர், தெரு விளக்கு, தூய்மை பணிகள் உள்ளிட்டவை தொடர்பான புகார்களை தெரிவிக்க நகராட்சி சார்பில் தானியங்கி புகார் சேவை மையம் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகரசபை தலைவர் புகழேந்தி தலைமை தாங்கி சேவை மையத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, துணைத் தலைவர் மங்களநாயகி மற்றும் நகராட்சி உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த தானியங்கி புகார் சேவை மையத்தை பொதுமக்கள் 9090545436 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். வரிகள், பிறப்பு இறப்பு சான்றிதழ், கட்டுமானம் அனுமதி, ஆக்கிரமிப்பு அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் புகார் மற்றும் கோரிக்கைகளை செல்போன் மூலமாகவே தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், புகார்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.