ரூ.30 லட்சம் வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைப்படுத்துவதாக புகார்


ரூ.30 லட்சம் வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைப்படுத்துவதாக புகார்
x

காட்பாடியில் ரூ.30 லட்சம் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய தனியார் நிறுவன ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்

காட்பாடி

காட்பாடியில் ரூ.30 லட்சம் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய தனியார் நிறுவன ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் நிறுவன ஊழியர்

காட்பாடி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் நந்தினி (வயது 30). ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பணி நிமித்தமாக அகமதாபாத் சென்றார்.

அப்போது கோயம்புத்தூர் காரமடை பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. இந்த விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து இரு குடும்பத்தினரும் திருமணத்துக்கு சம்மதித்தனர். அப்போது திருமணத்திற்கு 50 பவுன் நகை போட வேண்டும் என கார்த்திக் தெரிவித்துள்ளார். இதையடுத்து பெண் வீட்டார் 44 பவுன் நகை மற்றும் சீர்வரிசை கொடுத்தனர்.

வரதட்சணை கொடுமை

கடந்த 2020-ம் ஆண்டு கோயம்புத்தூரில் கார்த்திக்கும், நந்தினிக்கும் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கார்த்திக் பெங்களூருவில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி கோயம்புத்தூரில் ஐ.டி. கம்பெனியில் வீட்டில் இருந்தபடி பணி புரிந்து வருகிறார்.

இதற்கிடையில் கார்த்திக் அவரது மனைவி நந்தினியிடம் அடிக்கடி வரதட்சணை கேட்டு சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

சில வாரங்களுக்கு முன்பு பெங்களூருவில் வீட்டுமனை வாங்கப் போவதாகவும், அதற்கு ரூ.30 லட்சம் பணம் தேவைப்படுவதாகவும் நந்தினியிடம் கார்த்திக் கூறி, தொடர்ந்து அவரது வீட்டில் பணம் வாங்கி வருமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.

நந்தினியும் அவரது பெற்றோரிடத்தில் நடந்த சம்பவத்தை கூறினார். அவருடைய பெற்றோர்கள் ரூ.13 லட்சத்தில் வீட்டுமனை வாங்கி கொடுத்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து பணம், நகைகளை பெற்று வருமாறு நந்தினியை கார்த்திக் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

போலீசில் புகார்

இதனால் நந்தினி தனது தாய் வீடான காட்பாடி காந்திநகருக்கு வந்து நடந்த சம்பவங்கள் பெற்றோரிடம் தெரிவித்தார்.

பின்னர் இது குறித்து காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் பணம், நகை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கார்த்திக் மீது நந்தினி புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story