புகார் அளிக்காதவர்கள் ஆவணங்களுடன் வரலாம்


புகார் அளிக்காதவர்கள் ஆவணங்களுடன் வரலாம்
x

மோசடி செய்ததாக 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் புகார் அளிக்காதவர்கள் ஆவணங்களுடன் வந்து புகார் அளிக்கலாம் என துணை போலீஸ் சூப்பிரண்டு கூறியுள்ளார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

மோசடி செய்ததாக 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் புகார் அளிக்காதவர்கள் ஆவணங்களுடன் வந்து புகார் அளிக்கலாம் என துணை போலீஸ் சூப்பிரண்டு கூறியுள்ளார்.

இது குறித்து தஞ்சை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இரு மடங்கு தொகை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகரை சேர்ந்தவர் சவுகத்அலி. இவருடைய மகன் முகமது யூத சவுகத் அலி ஜபருல்லா. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்தபொழுது இவரது மனைவியிடம் முதலீட்டுக்கு கவர்ச்சிகர இரு மடங்கு தொகை தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி அதே பகுதியை சேர்ந்த கணேசன், சுவாமிநாதன் மற்றும் 8 பேர் கடந்த 2020-ம் ஆண்டு ரூ.15 கோடியே 4 ஆயிரத்தை ரொக்கமாக வங்கி கணக்கு மூலமாகவும், நேரடியாகவும் பெற்றுள்ளனர்.

புகார்

பின் முதலீடாக பெற்ற தொகையில் இருந்து ரூ.1 கோடியே 79 லட்சத்து 31 ஆயிரத்தை திருப்பி கொடுத்துள்ளனர். மீதமுள்ள ரூ.13 கோடியே 24 லட்சத்து 69 ஆயிரத்தை திருப்பி தராமல் ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். இதே போன்று ஏமாற்றப்பட்ட 39 நபர்கள் கொடுத்த புகாரின் படி தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 39 வழக்குகள் பதிவு செய்து மேற்கண்ட குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது வழக்கானது திருச்சி பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்டப்படி விசாரணைக்கு எடுக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவருகிறது. எனவே இதுவரை புகார் கொடுக்காதவர்கள் அசல் ஆவணங்களுடன் தஞ்சை ராஜப்பா நகரில் உள்ள மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேரில் வந்து புகார் கொடுக்கலாம்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story