தினத்தந்தி புகார் பெட்டி
புகார் பெட்டி
பயன்பாட்டிற்கு வராத சுகாதார வளாகம்
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியம் வீரபெருமாள்புரம் ஊராட்சியில் ஆண்கள் சுகாதார வளாகம் கட்டபட்டது. ஓரிரு மாதங்கள்கூட பயன்பாட்டிற்கு வராத நிலையில் தரை, கதவுகள் மற்றும் குழாய்கள் சேதம் அடைந்துள்ளது. எனவே பயன்பாட்டிற்கு வராத ஆண்கள் சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாராயணன், வீரபெருமாள்புரம்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
மதுரை தங்கரீகல் தியேட்டர் எதிரே உள்ள தெருவில் பலமாதமாக கழிவுநீர் சென்று தேங்குகிறது.தேங்கிய கழிவுநீரிலிருந்து துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்களும் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜின்னா, மதுரை.
கால்நடைகள் தொல்லை
மதுரை மாவட்டம் யாகாப்பா நகரில் மாடுகள் மற்றும் நாய்கள் தொல்லை அதிக அளவில் காணப்படுகிறது. இவைகள் சாலையில் செல்பவர்களை துரத்தி அச்சுறுத்துவதால் சாலையில் செல்ல பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் சாலையில் நின்று கொண்டு வாகனங்களுக்கு வழிவிடாமல் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். லட்சுமி, மதுரை.
கழிப்பறை வசதி வேண்டும்
மதுரை மாவட்டம் கீழமாசிவீதி பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ள தெருவில் பொதுமக்கள் பயன்படுத்த சரியான கழிப்பறை வசதி இல்லை. இதனால் இங்குள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் பொதுக்கழிப்பறை வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தனகுமார், மதுரை.
வீணாகும் குடிநீர்
மதுரை மாவட்டம் கோச்சடை காளை அம்பலக்காரர் தெருவில் உள்ள குடிநீர் தொட்டியின் குழாயில் பல நாட்களாக தண்ணீர் கசிந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. இதனால் இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் வீணாகும் தண்ணீர் சாலையில் தேங்குவதால் சாலையில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே குடிநீர் குழாயை சரிசெய்ய வேண்டும். ராஜன், கோச்சடை.