தரமற்ற உணவுப்பொருட்கள் குறித்து புகார் அளிக்கலாம்
தரமற்ற உணவுப்பொருட்கள் குறித்து இணையதளம், செல்போன் செயலி மூலம் புகார் அளிக்கலாம் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மக்களின் அன்றாட தேவைகளில் உணவு மற்றும் உணவுப்பொருட்கள் அவசியமானதாக விளங்கிறது. அவற்றின் தரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்திடவும், தரமற்ற மற்றும் கலப்பட உணவுகள் குறித்து பொதுமக்கள் இணையதளம் மற்றும் செல்போன் வாயிலாக புகார் தெரிவிக்கலாம். இதற்காக foodsafety.tn.gov.in என்ற புதிய இணையதளம் மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறையின் நுகர்வோர் புகார் செயலி (Food Safety Consumer Complaint App) தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையினால் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த செயலி வாயிலாக பொதுமக்கள் தங்கள் புகார்களை மிக எளிமையாக தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அளிக்கலாம். மேலும் இணையதளத்தில் பொதுமக்கள் தங்களது புகார்களை மிக எளிமையாக விவரங்களை தேர்ந்தெடுக்கும் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. TN food safety Consumer App என்ற செல்போன் செயலி பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம்.
பொதுமக்கள் தரமற்ற உணவு, கலப்பட உணவுப்பொருட்கள் உள்ளிட்ட புகார்கள் குறித்த விவரங்களை இணையதளம், செல்போன் செயலி மூலம் தெரிவிக்கலாம். புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ஆய்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு புகார்தாரருக்கு ஆய்வறிக்கை அளிக்கப்படும்.
இந்த தகவலை வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.