முறைகேடுகள் நடப்பதாக புகார்: பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை


முறைகேடுகள் நடப்பதாக புகார்: பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
x

முறைகேடுகள் நடப்பதாக கூறி பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மகளிர் குழுவினர் முற்றுகையிட்டனர்.

புதுக்கோட்டை

பொன்னமராவதி அருகே ஆலவயல் ஊராட்சி அளவிலான மகளிர் குழுகூட்டமைப்பு மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை கண்டித்தும், பொறுப்பாளர்களை மாற்றக்கோரியும் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மகளிர் குழுவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்ட மகளிர் திட்ட அலுவலர்கள் அமுதா, ஜெயக்குமார், ஜான் மற்றும் கிராம ஊராட்சி ஒன்றிய ஆணையர் கருணாகரன் ஆகியோர் வரவழைக்கப்பட்டு மகளிர் குழு பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொறுப்பாளர்கள் மாற்றப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் கூறிய முறைகேடுகள் கண்டறியப்பட்டு ஒருவார காலத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story