தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்-அகில பாரத மூத்த குடிமக்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்


தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்-அகில பாரத மூத்த குடிமக்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என அகில பாரத மூத்த குடிமக்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூர்

உடையார்பாளையம் வட்டம் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் சங்க கூட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்ட தலைவர் சுந்தரேசன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் சிவசிதம்பரம் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் கலியமூர்த்தி அறிக்கையை வாசித்தார். வட்ட பொருளாளர் ராமமூர்த்தி வரவு, செலவு கணக்குகளை வாசித்தார். கூட்டத்தில், பென்ஷனர்கள் மற்றும் குடும்ப பென்ஷனர்களுக்கு 3 சதம் அகவிலைப்படி ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் வழங்கியதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசை போல் ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படியை நிலுவையுடன் வழங்கிட வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்திட வேண்டும். சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயங்கொண்டத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் மாவட்ட மைய நூலகத்தினை நகராட்சியின் பழைய அலுவலகத்திலோ அல்லது பழைய நீதிமன்ற வளாகத்திலோ அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக தலைமை நிலைய செயலாளர் கணபதி வரவேற்றார். முடிவில் கலியபெருமாள் நன்றி கூறினார்.


Next Story