அவினாசியில்கட்டப்படும் வணிக வளாகத்திற்கு வருவாய்த்துறையிடம் முறையான அனுமதி பெறுவது அவசியம்
அவினாசியில்கட்டப்படும் வணிக வளாகத்திற்கு வருவாய்த்துறையிடம் முறையான அனுமதி பெறுவது அவசியம்
அவினாசி
அவினாசியில்கட்டப்படும் வணிக வளாகத்திற்கு வருவாய்த்துறையிடம் முறையான அனுமதி பெறுவது அவசியம் என்று மன்ற கூட்டத்தில் வார்டு உறுப்பினர் வலியுறுத்தினார்.
அவினாசி பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் மோகன் செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மன்றபொருள்படிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதையடுத்து உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீதேவி. 18. வது வார்டு
எங்களது வார்டில் இதுவரை எந்த பணியும் ஒதுக்கீடு செய்யவில்லை. எனது வார்டு மட்டும் புறக்கணிக்கப்படுகிறது என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுமன்ற அரங்கில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது பேரூராட்சி தலைவர் கூறுகையில் அனைத்து வார்டுகளிலும் ரூ.10 லட்சத்திற்குள் பணிகள் நடைபெற உள்ள நிலையில் 18. வது வார்டில் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக எஸ்டிமேட் இருப்பதால் இப்போது செய்ய இயலாது. இருப்பினும் குமரன் வீதியில் கான்கிரீட் தளம் மற்றும் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் இதையடுத்து வார்டு உறுப்பினர் தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.
தங்கவேல். 3. வது வார்டு
அவினாசி நகரில் ஏற்கனவே வீடு கட்டியுள்ளவர்கள் அதன் வரி ரசீது உள்ளிட்ட சான்றிதழ் களுடன் சென்று கூடுதலாக கட்டிய வீடுகளுக்கு வரிவிதிப்பு செய்ய கேட்டால் வீண் காலதாமதம். செய்து பல நாட்களுக்கு அலைக்கழிக்ககப்படுகிறது. இது வன்மையாக க்கத்தக்கது என்றார்.
தேவி. 10-வது வார்டு
பேரூராட்சிக்கு சொந்தமான மின் இணைப்பிலிருந்து அப்பகுதியில் ஒரு நபர் சட்டவிரோதமாக மின்சாரம் பயன்படுத்தி வருகிறார். நிர்வாகததினர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.சீனிவாசபுரம் பகுதியில் மாகாளியம் மன்கோவில் மண்டபத்தில நடந்த தனிநபர் விசேஷத்திற்கு பேரூராட்சி ஊழியர்கள் காலை முதல் மாலை வரைபந்தி இலை எடுப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தனர் அதற்கு பேரூராட்சி நிர்வாகத்தினர் எப்படி அனுமதி வழங்கலாம் என்றார். அதற்கு நிர்வாகத்தினரகூறுகையில் அன்று பேரூராட்சி ஊழியர்கள் விடுமுறையில் இருந்தனர் என்றார்கள்.
கருணாம்பாள்8. வது வார்டு
அவினாசி எட்டாவது வார்டு ஸ்ரீராம் நகர் பகுதியில் தனியார் இடங்களில் முட்பதர்கள் வண்டி கிடக்கின்றன இதனால் அங்கு அதிக அளவில் பாம்புகள் இருப்பதால் பகுதி மக்களுக்கு அச்சம் ஏற்பட்டு வருகிறது எனவே முற்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
திருமுருகநாதன்:11 -வது வார்டு
அவினாசியில் பழைய பஸ் நிலையம் இருந்த இடத்தில் தற்போது ரூபாய் 6கோடி மதிப்பில் வணிக வளாகம் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்த இடம் வருவாய் துறை வசம் உள்ளது.இதுகுறித்து வருங்காலத்தில் பிரச்சனைகள் வருவதை தவிர்ப்பதற்காக முறையாக வருவாய் துறையிலும் அனுமதி பெற வேண்டும் அதற்கு மன்ற கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்பட்டு கலெக்டருக்கு கொடுத்து முறைப்படுத்தி அந்த இடத்தை பேரூராட்சி வசம இருக்க
.. உரிய நடவடிக்கை மேற்கொள்ள.வேண்டும்.
அவினாசியில் உள்ள குளங்களுக்கு ஷட்டர் பொருத்தப்பட்டுள்ளது அது பராமரிப்பின்றி சேதம் அடைந்துள்ளது மழை காலங்களில் தண்ணீர் நிரம்பினால் தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்படும் எனவே பழுதடைந்த ஷட்டாகளை பராமரிப்பு செய்து வைக்க வேண்டும்என்றார்.இவ்வாறு வார்டு உறுப்பினர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்