தர்மபுரியில் கீழே கிடந்த ரூ.11 ஆயிரம் போலீசில் ஒப்படைப்பு லாரி உரிமையாளருக்கு பாராட்டு


தர்மபுரியில்  கீழே கிடந்த   ரூ.11 ஆயிரம் போலீசில் ஒப்படைப்பு  லாரி உரிமையாளருக்கு பாராட்டு
x

தர்மபுரியில் கீழே கிடந்த ரூ.11 ஆயிரம் போலீசில் ஒப்படைத்த லாரி உரிமையாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தர்மபுரி

தர்மபுரி:

அரூர் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் அஸ்லம் பாஷா. லாரி உரிமையாளரான இவர் தர்மபுரி பஸ் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் நின்ற ஆட்டோ அருகே ரூ.11 ஆயிரம் கீழே கிடந்தது. அந்த பணத்தை எடுத்த அவர் அந்த பகுதியில் காத்திருந்தார். அப்போது அந்த பணத்தை தேடி யாரும் அங்கு வரவில்லை. இதனால் அந்த பணத்தை தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அவருடைய நேர்மையான செயல்பாட்டிற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ் மற்றும் போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story