குடும்ப தகராறில் கணினி மைய உரிமையாளருக்கு கத்திக்குத்து


குடும்ப தகராறில் கணினி மைய உரிமையாளருக்கு கத்திக்குத்து
x

குடும்ப தகராறில் கணினி மைய உரிமையாளருக்கு கத்திக்குத்து விழுந்தது.

கரூர்

தோகைமலை அருகே உள்ள வெள்ளப்பட்டியை சேர்ந்த சக்திவேல் (வயது 45). இவர் தோகைமலையில் சொந்தமாக கணினி மையம் நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் குமார் (46). இவர் திருச்சியில் கறிக்கடை நடத்தி வருகிறார். இவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக குடும்ப தகராறு இருந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினமும் சக்திவேலுக்கும், குமாருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குமார், சக்திவேலை தகாதவார்த்தையால் திட்டி கத்தியால் உள்ளங்கையில் குத்தி உள்ளார்.

இதில் காயம் அடைந்த சக்திவேல் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து, குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story