விடைத்தாள் திருத்தும் மையத்தின் முன்பு கணினி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


விடைத்தாள் திருத்தும் மையத்தின் முன்பு கணினி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Jun 2022 6:30 PM GMT (Updated: 2022-06-09T00:00:47+05:30)

மன்னார்குடியில் விடைத்தாள் திருத்தும் மையத்தின் முன்பு கணினி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது

திருவாரூர்

மன்னார்குடி:

கற்பித்தலை தவிர வேறு பணிகளுக்கு கணினி ஆசிரியர்களை பயன்படுத்த கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி மன்னார்குடி பின்லே மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் திருத்தும் மையத்தின் முன்பு கணினி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்க திருவாரூர் மாவட்டத் தலைவர் குருமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் கணினி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

திருச்சி மாவட்டத்தில், உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்த கணினி ஆசிரியர் வினோத், திடீரென சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவர் வாகன விபத்தில் இறந்துவிட்டார். அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தின் போது கோஷமிட்டனர்.


Next Story