திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ஒரேநாளில் 4,046 வழக்குகளுக்கு சமரச தீர்வு

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ஒரேநாளில் 4,046 வழக்குகளுக்கு சமரச தீர்வு
x

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ஒரேநாளில் 4,046 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.19 கோடியே 81½ லட்சம் உரியவர்களுக்கு இழப்பீடாக பெற்று வழங்கப்பட்டது.

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ஒரேநாளில் 4,046 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.19 கோடியே 81½ லட்சம் உரியவர்களுக்கு இழப்பீடாக பெற்று வழங்கப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு புதுடெல்லி மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல்படி திருச்சி மாவட்டத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமாகிய கே.பாபு மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார்.

திருச்சி நீதிமன்றங்களில் 9 அமர்வுகளும், மணப்பாறை, முசிறி, துறையூர், லால்குடியில் தலா 2 அமர்வுகளும், ஸ்ரீரங்கம், தொட்டியம் தலா ஒரு மக்கள் நீதிமன்ற அமர்வுகளும் ஆக மொத்தம் 19 அமர்வுகளில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் இரு தரப்பினரையும் அழைத்து வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

4,046 வழக்குகளுக்கு தீர்வு

இதில் சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி கடன் வசூல் வழக்கு, மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்பநல வழக்குகள், தொழிலாளர் இழப்பீட்டு வழக்குகள், உரிமையியல் சம்பந்தமான வழக்குகள் என பல்வேறு வகையான மொத்தம் 8,410 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

இதில் 4,046 வழக்குகளுக்கு ஒரேநாளில் சமரச தீர்வு எட்டப்பட்டது. இதன் மூலம் ரூ.19 கோடியே 81 லட்சத்து 55 ஆயிரத்து 922 உரியவர்களுக்கு இழப்பீடாக பெற்று தரப்பட்டது. நிகழ்ச்சியில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் (பொறுப்பு) மணிகண்டராஜா மற்றும் நீதிபதிகள் ஜெயசிங், நந்தினி, திருச்சி வக்கீல்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story