உறையூர் வெக்காளி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா; நாளை தொடங்குகிறது
உறையூர் வெக்காளி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நாளை தொடங்குகிறது.
திருச்சி
திருச்சி உறையூரில் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 48 நாட்களாக மண்டலாபிஷேக சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. வருகிற 23-ந்தேதி மண்டல பூஜை நிறைவு பெறுகிறது. இதையொட்டி மண்டலாபிஷேக நிறைவு விழா நாளை (சனிக்கிழமை) முதல் 23-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. மேலும் 48-ம் ஆண்டு சதசண்டி யாகமும் 23-ந்தேதி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் லட்சுமணன், உதவி ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story