மாரியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா
மாரியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது.
வாணியம்பாடி தொகுதி புல்லூர் ஊராட்சியை சேர்ந்த மேல்பள்ளத்தூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நடந்த மண்டல பூஜை நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊர் கவுண்டர் டி.தங்கவேல், தர்மகர்த்தாக்கள் பி.கே.ரவி, மகேந்திரன், ரமேஷ், பூசாரி பெரிய மாணிக்கம் மற்றும் ஜெயராமன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா அருள்நாதன், துணைத் தலைவர் செல்லப்பன், வார்டு உறுப்பினர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி தொகுதி கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., திம்மாம்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணி ஆகியோர் கலந்து கொண்டனர். பால்குடம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அன்னதானமும் நடைபெற்றது.
அம்மன் வேடமிட்டு சிறப்பு நாடகங்களும் நடைபெற்றது. பக்தர்கள் கொண்டு தரிசனம் செய்தனர்.