போலீஸ் அதிகாரிகளை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
போலீஸ் அதிகாரிகளை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி
தேனி வக்கீல்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில், தேனி வக்கீல்கள் சங்க உறுப்பினர்களுக்கு போலீஸ் துறையால் ஏற்பட்ட அவமரியாதையான செயலை கண்டித்து வக்கீல்கள் காலவரையற்ற கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பின்னர் வக்கீல்களை அவமரியாதையாக நடத்திய போலீஸ் அதிகாரிகளை கண்டித்து கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு போலீஸ் அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story