போலீசாரை கண்டித்துஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், தேனி பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி
ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், தேனி பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளர் கண்ணன் தலைமை தாங்கினார். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம், மாநில பொதுச்செயலாளர் மாசிலாமணி, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் காளியப்பன், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில செயலாளர் மேரி லில்லிபாய் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கடந்த மாதம் 26-ந்தேதி டிராக்டர் ஊர்வலம் நடத்தியதற்கு வழக்குப்பதிவு செய்த போலீசாரை கண்டித்தும் அந்த வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதில் விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ராஜப்பன், மாவட்ட தலைவர் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story