விலைவாசி- மின்கட்டண உயர்வை கண்டித்துதே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
விலைவாசி- மின்கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்
தி.மு.க.வினர் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கவேண்டும் என்றும், தமிழகத்துக்கு வழங்கவேண்டிய காவிரி நதிநீரை கர்நாடக அரசிடம் இருந்து பெற்றுத்தரவேண்டும் என்றும், அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வை கண்டித்தும் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிலையம் அருகே தே.மு.தி.க.வினர் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் செல்வகுமார், சுப்பிரமணி, பகுதி செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தொழிற்சங்க துணை செயலாளர் விஜய் வெங்கடேஷ் கலந்துகொண்டு பேசினார். இதில் கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவை தலைவர் ரங்கராஜ், பொருளாளர் பாலாஜி, துணை செயலாளர்கள் பிரகாஷ், சஞ்சய்குமார், வட்ட செயலாளர் பெரிய கருப்பண் உள்பட பலர் கலந்துகொண்டனர்.