தேர்தலில் பண பட்டுவாடா செய்வதை கண்டித்துஜனநாயக பிச்சை எடுக்கும் நூதன போராட்டம்பெரியார், அண்ணா வேடமணிந்து பங்கேற்பு


தேர்தலில் பண பட்டுவாடா செய்வதை கண்டித்துஜனநாயக பிச்சை எடுக்கும் நூதன போராட்டம்பெரியார், அண்ணா வேடமணிந்து பங்கேற்பு
x
தினத்தந்தி 24 Jan 2023 7:30 PM GMT (Updated: 2023-01-25T01:00:32+05:30)
ஈரோடு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் ஈரோட்டில் நேற்று ஜனநாயக பிச்சை எடுக்கும் நூதன போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்கு இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து இந்த போராட்டம் தொடங்கப்பட்டது. இதில் பெரியார், அண்ணா ஆகியோரின் வேடமணிந்து பங்கேற்ற 2 பேர் ஓட்டுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்பதை வலியுறுத்தினார்கள்.

இதுகுறித்து இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், "பணம் பெற்று கொண்டு தேர்தலில் ஓட்டுப்போடாதீர்கள். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை கண்டித்து ஜனநாயகத்தை கேட்டு பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தி வருகிறோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். கோவை மாநகராட்சியில் தேர்தலின்போது பண பட்டுவாடா செய்யப்பட்டதாக ஏற்கனவே வழக்கு தொடர்ந்து உள்ளோம். அதுபோல் ஈரோட்டில் நடந்தாலும் வழக்கு தொடருவோம்", என்றார்.


Next Story