ஆறுமுகநேரியில் மின்கட்டணத்தை உயர்வை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஆறுமுகநேரியில் மின்கட்டணத்தை உயர்வை கண்டித்து  விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 22 Sep 2022 6:46 PM GMT)

ஆறுமுகநேரியில் மின்கட்டணத்தை உயர்வை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பு அமைப்பான தமிழ்நாடு விவசாயிகள் சங்க கிளை சார்பில் ஆறுமுகநேரி மெயின் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், அதை வாபஸ் பெற வலியுறுத்தியும், உப்பளத் தொழிலாளர்களுக்கு மாநில நிர்வாகம் அளித்துள்ள சம்பளத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால், அங்கு போக்குவரத்து போலீஸ்காரர் மூலம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு நகர விவசாய சங்க செயலாளர் ராமநாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட விவசாயிகள் சங்கத் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தாலுகா விவசாய சங்க தலைவர் நடேசன் ஆதித்தன், மாவட்ட தலைவர் எஸ்.எம். ராமையா, மாவட்ட துணைச் செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். செல்வி நன்றி கூறினார்.


Next Story