ஈரோட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்களை கண்டித்து சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்


ஈரோட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்களை கண்டித்து  சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்
x

சுமை தூக்கும் தொழிலாளர்களை கண்டித்து ஈரோட்டில் சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் வெளிமாநிலங்களுக்கு ஜவுளிகள் அனுப்ப முடியாமல் குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளன.

ஈரோடு

சுமை தூக்கும் தொழிலாளர்களை கண்டித்து ஈரோட்டில் சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் வெளிமாநிலங்களுக்கு ஜவுளிகள் அனுப்ப முடியாமல் குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளன.

தாக்குதல்

ஈரோட்டில் இருந்து மஞ்சள், ஜவுளி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த பொருட்கள் லாரி புக்கிங் அலுவலகம் மூலமாக அனுப்பபடுகிறது. இந்த சாலை போக்குவரத்து நிறுவனங்கள் ஈரோடு பவானிரோடு, பார்க்ரோடு பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் கடந்த 17-ந் தேதி ஈரோடு பவானிரோட்டில் உள்ள தனியார் சரக்கு போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் 7 பேரை அந்த நிறுவனம் பணியிடை நீக்கம் செய்தது. இதை கண்டித்து சுமை தொழிலாளர்கள் அந்த நிறுவனத்தின் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஈரோடு சரக்கு போக்குவரத்து சங்க செயலாளர் பிங்கலன் என்பவர் தொழிலாளர்களால் தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.

வேலை நிறுத்த போராட்டம்

சுமை தூக்கும் தொழிலாளர்கள் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதை கண்டித்து நேற்று முன்தினம் முதல் சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கப்பட்டது. இதனால் ஈரோட்டில் இருந்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் ஜவுளி மற்றும் பொருட்கள் குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளன. இந்த போராட்டம் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. எனவே வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டிய பொருட்களும் அனுப்பப்படாமல் உள்ளது. இந்த 2 நாட்கள் போராட்டம் காரணமாக சுமார் ரூ.200 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்று ஈரோடு சரக்கு போக்குவரத்து சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story