மணிப்பூர் சம்பவத்தை கண்டித்துகிறிஸ்தவ மக்கள் நல பேரமைப்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு கிறிஸ்தவ மக்கள் நல பேரமைப்பு சார்பில், தேனி பங்களாமேட்டில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி
தமிழ்நாடு கிறிஸ்தவ மக்கள் நல பேரமைப்பு சார்பில், தேனி பங்களாமேட்டில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தேனி மாவட்ட ஊழியர் ஐக்கிய தலைவர் தீமோத்தேயு தலைமை தாங்கினார். தேனி புதுபள்ளிவாசல் ஜமாத் தலைவர் சர்புதீன், அல்லிநகரம் ஜமாத் தலைவர் மல்கர் ஒலி, தேனி வட்ட ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் அபுதாஹீர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும், மணிப்பூர் மாநில அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story