திருச்செந்தூரில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்துஅ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


திருச்செந்தூரில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்துஅ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட நிர்வாகத்தையும், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் கலந்து கொண்டார்.

அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் அருகே நகர அ.தி.மு.க. சார்பில் மாவட்ட நிர்வாகத்தையும், திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்செந்தூர் நகராட்சியில் சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்து வரி உயர்வை குறைத்து அரசாணை வெளியிட வேண்டும். திருச்செந்தூர் நகராட்சி பகுதி முழுவதும் சீரான குடிநீர் வழங்க வேண்டும். அமலிநகரில் உடனடியாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தினால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை விரைந்து சீரமைக்க வேண்டும். திருச்செந்தூர் நகராட்சி பகுதியில் சாலையில்லாத பகுதிகளுக்கு புதிய சாலைகள் அமைக்க வேண்டும். உடைந்த சாலைகளை சீரமைத்து, மின்விளக்கு வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில், அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, திருச்செந்தூர் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி மகாலிங்கம், ஒன்றிய செயலாளர் விஜயகுமார், முன்னாள் ஒன்றிய பொருளாளர் பழக்கடை திருப்பதி, காயல்பட்டினம் பனை வெல்லம் கூட்டுறவு சங்க தலைவர் பூந்தோட்டம் மனோகரன், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் மகாலிங்கம், மாவட்ட பிரதிநிதி ஆர்.எம்.கே.எஸ்.சுந்தர், நகர செயலாளர் காயல் மௌலானா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story