மதுபாட்டில்கள் பதுக்கி கைதானவருக்கு நிபந்தனை ஜாமீன்-"முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும்"


மதுபாட்டில்கள் பதுக்கி கைதானவருக்கு நிபந்தனை ஜாமீன்-முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும்
x

மதுபாட்டில்கள் பதுக்கி கைதானவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி “முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும்” என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சண்முகநாதன். இவர் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததாக சில மாதங்களுக்கு முன்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அவருக்கு சொந்தமான இடத்தில் பதுக்கி வைத்திருந்த 1,200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், சண்முகநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கேட்டு, மதுரை ஐகோர்ட்டில் சண்முகநாதன் மனு தாக்கல் செய்தார். அதன்பேரில் இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் சிறையில் அடைக்கப்பட்ட நாட்களை கருத்தில் கொண்டு அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்க முடிவு செய்யப்படுகிறது. எனவே அவர் ரூ.50 ஆயிரத்தை முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும். தன் மீதான வழக்கின் சாட்சியங்களை கலைக்கக்கூடாது. சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story