திண்டுக்கல் அருகே மீன்பிடி திருவிழா நடத்த குளத்தை மீட்டு தரும்படி கிராம மக்கள் மனு


திண்டுக்கல் அருகே மீன்பிடி திருவிழா நடத்த  குளத்தை மீட்டு தரும்படி கிராம மக்கள் மனு
x

திண்டுக்கல் அருகே மீன்பிடி திருவிழா நடத்த குளத்தை மீட்டு தரும்படி கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் கிழக்கு தாலுகா அடியனூத்து ஊராட்சி என்.பெருமாள் கோவில்பட்டி கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், என்.பெருமாள்கோவில்பட்டியில் மீரா ராவுத்தர் குளம் உள்ளது. இந்த குளம் பருவமழையால் நிரம்பியதும், ஊர் பொதுமக்கள் சேர்ந்து மீன் வாங்கி குளத்தில் விடுவோம். குளத்தில் தண்ணீர் வற்றும்போது மக்களுக்கு அறிவிப்பு செய்து மீன்பிடி திருவிழா நடத்தி வருகிறோம்.

அதன்படி கடந்த ஆண்டும் மீன்பிடி திருவிழா நடத்தினோம். அதேபோல் இந்த ஆண்டும் மீன் பிடி திருவிழா நடத்த இருக்கிறோம். இதற்கிடையே அந்த குளத்தை ஏலமிட்டதாக தெரிகிறது. அதையொட்டி குளத்தின் கரையில் கூடாரமும் அமைக்கப்பட்டு வருகிறது. எனவே என்.பெருமாள்கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார மக்கள் பயன்பெறும் வகையில் குளத்தை மீட்டு தரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story