லாரி மோதி கண்டக்டர் பலி
கும்பகோணம் அருகே லாரி மோதி கண்டக்டர் பரிதாபமாக இறந்தார்.
கும்பகோணம் அருகே லாரி மோதி கண்டக்டர் பரிதாபமாக இறந்தார்.
அரசு பஸ் கண்டக்டர்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கல்யாணபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது47). இவர் கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று இரவு கும்பகோணத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். திருவிசநல்லூர் மச்சா குளம் அருகே வந்த போது கும்பகோணம் நோக்கி வந்த டேங்கர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
போலீசார் விசாரணை
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இளங்கோவன் தலையில் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக அவருடைய உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.