அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மாநாடு
சிவகிரியில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மாநாடு நடந்தது.
சிவகிரி:
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான தென்காசி மாவட்ட முதல் மாநாடு சிவகிரி தெற்கு ரத வீதியில் நடந்தது. சங்கத்தின் மாநில தலைவர் ஜான்சிராணி சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்து பேசினார். சிவகிரி நகர பஞ்சாயத்து தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல் வரவேற்று பேசினார். வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியன் சேர்மன் பொன்முத்தையாபாண்டியன், சிவகிரி அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் டாக்டர் இசக்கி, நெல்லை மாவட்ட பொறுப்பாளர்கள் குமாரசாமி, தியாகராஜன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தை சேர்ந்த பகத்சிங், சுந்தரவடிவேல், செயலர் தங்கேஸ்வரன், தலைமை ஆசிரியர் கற்பகராஜ், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பாப்புராஜ், ஜெயராஜ், கே.எம்.கிருஷ்ணன், ரவிந்திரநாத்பாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.