தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு
வெள்ளகோவில்
வெள்ளகோவில், கரூர் ரோடு, ஸ்ரீராம் நகரில் உள்ள ஒரு மண்டபத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர் மாவட்ட 4-வது மாநாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர் மாவட்டத் தலைவர் ஆர்.குமார் தலைமையில் நடைபெற்றது. மாநிலத்தலைவர் த.செல்லக்கண்ணு மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டில் தலித் விடுதலை இயக்க மாநில தலைவர் சா.கருப்பையா, தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் சன்.முத்துக்குமார், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் முகில் ராசு ஆகியோர் பேசினர். மாநாட்டில் திருப்பூர் முதலிபாளையம் தாட்கோவில் சிதிலமடைந்து கிடக்கும் தொழிற்சாலை கட்டிடங்களை சீரமைத்து பட்டியல் இன இளைஞர்களுக்கு வங்கிக் கடன் உதவியுடன் தொழில் தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்.இந்த வழக்குகளுக்கு திருப்பூர் மாவட்ட மற்றும் மாநகர காவல் துறையில் சிறப்பு காவல் பிரிவு மற்றும் உதவி மையம் அமைக்க வேண்டும், சாயக்கழிவு, பாதாள சாக்கடை மற்றும் சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதை தடுக்கும் விளம்பரங்கள் பரவலாக செய்யப்பட வேண்டும், இப்பணிகளில் எந்திரங்களை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், மனிதர்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.முடிவில் வரவேற்பு குழு செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.