திருநங்கை கொலை: `பணத்தை திருடிவிட்டு ஆபாசமாக திட்டியதால் தாக்கினேன்' -கைதான டிரைவர் வாக்குமூலம்


திருநங்கை கொலை:  `பணத்தை திருடிவிட்டு ஆபாசமாக திட்டியதால் தாக்கினேன்  -கைதான டிரைவர் வாக்குமூலம்
x

திருநங்கை கொலையில் கைதான டிரைவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் `பணத்தை திருடிவிட்டு ஆபாசமாக திட்டியதால் தாக்கினேன்' என கூறியுள்ளார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லியை சேர்ந்தவர் திருநங்கை பிரபு (வயது 35). இவர் பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி மலையில் 4 வழிச்சாலை பகுதியில் படுகாயத்துடன் கிடந்தார். ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளத்தை சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ்குமாரை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ரெட்டியார்பட்டி 4 வழி மலைச்சாலையில் ஓய்வுக்காக லாரியை நிறுத்தி இருந்தேன். நானும், கிளீனரும் அருகில் உள்ள கடையில் டீ குடித்து விட்டு திரும்பி வந்த போது, திருநங்கை பிரபு மற்றும் அவருடன் வந்திருந்தவரும் சேர்ந்து லாரியின் உள்ளே ஏறி டிரைவர் இருக்கை பெட்டியில் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை திருடிக்கொண்டிருந்தனர். அதைக்கண்ட நாங்கள் 2 பேரையும் கண்டித்தோம். ஆனால் அவர்கள் பணத்தை திரும்ப தரமறுத்ததுடன், எங்களை ஆபாசமாகவும் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் லாரியில் இருந்த இரும்பு சுத்தியலை எடுத்து பிரவுவை தாக்கினேன். அதில் அவர் காயம் அடைந்த உடன் அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்று விட்டோம்'' என்று வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story