மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதி


மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதி
x

மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

அறந்தாங்கி அருகே சிலட்டூரை சேர்ந்த 80 வயது மூதாட்டிக்கு காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்ததில் அந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த மூதாட்டி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story