தரமற்ற இறைச்சி, சப்பாத்தி மாவு பறிமுதல்


தரமற்ற இறைச்சி, சப்பாத்தி மாவு பறிமுதல்
x

சேலத்தில் தனியார் ஓட்டலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து தரமற்ற முறையில் இருந்த இறைச்சி மற்றும் சப்பாத்தி மாவு ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.

சேலம்

அன்னதானப்பட்டி

தனியார் ஓட்டலில் ஆய்வு

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் ஓட்டலில் நேற்று முன்தினம் வாடிக்கையாளர் ஒருவர் மட்டன் பிரியாணி மற்றும் மட்டன் கிரேவி வாங்கியுள்ளார். பின்னர் அவர் வீட்டிற்கு கொண்டு சென்று சாப்பிட முயன்றபோது, அது தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டதால், கெட்டுபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அவர் ஓட்டலுக்கு சென்று உணவு தரமற்ற முறையில் விற்பனை செய்தது குறித்து அங்கிருந்த ஊழியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் சரியான முறையில் பதில் தெரிவிக்காமல் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இறைச்சி, பிரியாணி பறிமுதல்

இது தொடர்பாக வாடிக்கையாளர், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து புகார் செய்தார். அதன்பேரில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, முறையாக பதப்படுத்தாமல் உணவு மற்றும் இறைச்சி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து தரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த கோழி மற்றும் ஆட்டு இறைச்சி, அசைவ பிரியாணி, சப்பாத்தி மாவு என 13 கிலோ உணவுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு விளக்கம் கேட்டு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.


Next Story