49 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
49 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகங்கை
காரைக்குடி,
காரைக்குடி அருகே உள்ள அரியக்குடியை சேர்ந்தவர் சுரேந்திரன் (வயது 36). இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவர் கடையில் விற்பனைக்கு தேவையான பொருட்களை காரைக்குடியில் வாங்கிக்கொண்டு அரியக்குடி நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் தெற்கு பொலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவர் சுரேந்திரன் மொபட்டை சோதனையிட்டபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட 49 கிலோ குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, சுரேந்திரனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story