பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்
பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கழனிவாசல் பகுதியில் 2 இடங்களில் ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசனுக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1 டன் மதிப்பிலான ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து அல்லிநகரம் அரசு சேமிப்பு கிடங்கில் ஒப்படைத்தார். மேலும் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தவர்கள் யார்? என்று வட்ட வழங்கல் அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story