பஸ், ரெயிலில் கடத்திய 13 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது


பஸ், ரெயிலில் கடத்திய 13 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது
x

பஸ், ரெயிலில் கடத்திய 13 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி மற்றும் போலீசார் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது திருப்பதியில் இருந்து திருச்சி செல்லும் அரசு பஸ் வந்தது. அந்த பஸ்ஸில் ஏறி சோதனை செய்த போது அதில் சந்தேகப்படும் வகையில் இருந்த ஒருவரை பிடித்து அவர் பையை சோதனை செய்தனர். அதில் 5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சாவை கடத்தி வந்த தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்த முருகன் (வயது 56) என்பவரை கைது செய்தனர்.

இதேபோல் ஹவுராவிலிருந்து யஷ்வந்த்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காட்பாடி ரெயில் நிலையம் வந்தது. அப்போது காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் ரெயில் பெட்டிகளில் ஏறி சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும் வகையில் பையை வைத்திருந்த வாலிபரை சோதனை செய்தனர். அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. பையில் இருந்த 8 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சாவை கடத்தி வந்த பிஜய்சர்க்கார் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அரசு பஸ் மற்றும் ரெயிலில் கடத்திய 13 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story