மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்


மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்
x

விக்கிரமங்கலம் அருகே மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முத்துவாஞ்சேரி கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதியில் இருந்து சிலர் மாட்டு வண்டியில் மணல் கடத்துவதாக சாத்தம்பாடி கிராம நிர்வாக அதிகாரி தினேஷ் குமார் விக்கிரமங்கலம் போலீசாருக்கு புகார் அளித்தார். அதன்பேரில் விக்கிரமங்கலம் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் மாட்டு வண்டியில் சென்றவர் மாட்டு வண்டியை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். இதையடுத்து போலீசார் மாட்டு வண்டியை சோதனை நடத்தியபோது மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. பின்னர் அந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி சென்றவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story