ஆற்றில் மணல் அள்ளிய மாட்டு வண்டி பறிமுதல்


ஆற்றில் மணல் அள்ளிய மாட்டு வண்டி பறிமுதல்
x

ஆற்றில் மணல் அள்ளிய மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி

காட்டுப்புத்தூர்:

காட்டுப்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்துக்கு, காட்டுப்புத்தூர் அருகே காவிரி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர், போலீசாருடன் அங்கு சென்று கண்காணித்தார். அப்போது காடுவெட்டி காவிரி ஆற்றில் மாட்டு வண்டியில் அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்தது. மேலும் மணலுடன் அந்த மாட்டு வண்டியை அங்கு விட்டுவிட்டு தப்பித்து சென்றவர், காடுவெட்டி மேலவழிகாட்டை சேர்ந்த வீமன்(வயது 55) என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து, மாட்டு வண்டியை பறிமுதல் ெசய்த போலீசார், வீமனை தேடி வருகின்றனா்.


Next Story