நாட்டு துப்பாக்கி- பால்ரஸ் குண்டுகள் பறிமுதல்; வாலிபர் கைது
நாட்டு துப்பாக்கி- பால்ரஸ் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி
உப்பிலியபுரம்:
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள மாராடி தேவேந்திர குல வேளாளர் தெருவை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 30). இவர் கடந்த 10 ஆண்டுகளாக அதே கிராமத்தை சேர்ந்த ஜெயதேவன் என்பவரது தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். அந்த தோட்டத்தில் உள்ள ஆஸ்பெட்டாஸ் ஷீட் மேற்கூரையுடன் கூடிய கொட்டகையில் நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ஒரு நாட்டு துப்பாக்கியும், வெடி மருந்து 100 கிராம் மற்றும் 30 பால்ரஸ் குண்டுகள் ஆகியவை அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து சக்திவேல் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story