சரவெடிகள் பறிமுதல்


சரவெடிகள் பறிமுதல்
x

வெம்பக்கோட்டை அருகே சரவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் சத்திரப்பட்டி பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக சாக்கு பையுடன் சென்று கொண்டிருந்த ஒருவரின் பையை வாங்கி சோதனை செய்தார். அதில் சுப்ரீம் கோர்ட்டால் தடை செய்யப்பட்ட சரவெடிகள் வைத்திருந்ததும், அவர் கணஞ்சாம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த சின்ன கருப்பசாமி (வயது 37) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து 20 கிலோ சரவெடிகளை பறிமுதல் செய்தனர்.


Next Story