பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக காரில் கடத்த முயன்ற 332 கிலோ குட்கா பறிமுதல்- டிரைவர் கைது
கிருஷ்ணகிரி:
பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக காரில் கடத்த முயன்ற 332 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
வாகன சோதனை
கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சுங்கச்சாவடி அருகில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த காரை நிறுத்தி ேபாலீசார் சோதனை செய்தனர்.
அந்த 332 கிலோ குட்கா, பான்பராக், பான்மசாலா உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் ஈரோடு மாவட்டம் பவானி சொக்கரம்மன் நகரை சேர்ந்த வின்சன் (வயது65) என்பது தெரியவந்தது.
டிரைவர் கைது
மேலும் பெங்களூருவில் இருந்து ஈரோடுக்கு குட்கா கடத்தியது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து குட்கா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.