பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்


பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர்

வேலூர் வட்ட வழங்கல் அலுவலர் பூமா மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் சதீஷ் ஆகியோர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் குறித்து கள விசாரணை மேற்கொள்ள சலவன்பேட்டை பகுதிக்கு சென்றனர். அப்போது அங்குள்ள சுடுகாட்டின் ஓரம் சில மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

அதுகுறித்து சந்தேகம் அடைந்த அவர்கள் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்த போது அதில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. சுமார் 40 மூட்டைகளில் 1,800 கிலோ ரேஷன் அரிசியை மர்ம நபர்கள் கடத்துவதற்காக அங்கு பதுக்கி வைத்திருந்தனர். அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து வேலூர் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.

மேலும் ரேஷன் அரிசியை அங்கு பதுக்கி வைத்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story