மதுபாட்டில்கள் பறிமுதல்; 3 பேர் கைது


மதுபாட்டில்கள் பறிமுதல்; 3 பேர் கைது
x

மதுபாட்டில்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்

மதுரை

பேரையூர்

கொட்டாம்பட்டி பகுதிகளில் அரசு அனுமதியின்றி மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். கொட்டாம்பட்டி அருகே பாண்டாங்குடி கண்மாய் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட அய்வத்தான்பட்டியைச் சேர்ந்த ராமசந்திரன் (வயது 51) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 31 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் பாண்டாங்குடி விலக்கு அருகே விற்பனைக்காக மதுபான பாட்டில்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற வெளினிப்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகர்(51) என்பவரை கொட்டாம்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அரிச்சந்திரன் கைது செய்தார். அவரிடமிருந்து 22 மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. டி.கல்லுப்பட்டி போலீசார் மதுவிலக்கு சம்பந்தமாக வன்னி வேலம்பட்டி விலக்கு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது விருதுநகரை சேர்ந்த ரஞ்சித்குமார் (36) என்பவர் விற்பனை செய்வதற்காக 15 மதுபாட்டில்கள் வைத்திருந்தார். ரோந்து சென்ற போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story