செங்கோட்டையில் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்; வாலிபர் கைது
செங்கோட்டையில் ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், வாலிபரை கைது செய்தனர்.
தென்காசி
செங்கோட்டை:
செங்கோட்டை நகராட்சி பூங்கா அருகில் உள்ள முருகாத்தாள் என்பவர் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் போலீசார் அந்த வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்து ஒரு வேனில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஒரு டன் ரேஷன் அரிசியுடன் அந்த வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சேர்ந்தமரம் அருகே உள்ள கடையாலுருட்டி சர்ச் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சுந்தரராஜன் (வயது 20) என்பவரை கைது செய்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story