தடை செய்யப்பட்ட ஊது குழல்கள் பறிமுதல்
தடை செய்யப்பட்ட ஊது குழல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்தரை தேர் திருவிழாவில் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் தடை செய்யப்பட்ட ஊது குழல்கள் (பீப்பிகள்) விற்றால் பறிமுதல் செய்யப்படும் என்றும், மேலும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் அறிவுறுத்தியிருந்தனர். இந்நிலையில் போலீசாரின் அறிவுறுத்தலையும் மீறி நேற்று சமயபுரம் கடைவீதி, கோவிலுக்கு பின்புறம், சமயபுரம் நால்ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட ஊது குழல்கள் விற்பனை செய்யப்படுவதாக சமயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் ஆயிரக்கணக்கான ஊது குழல்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். தொடர்ந்து ஊது குழல்கள் விற்பனை செய்த நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story