ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகங்கை
காரைக்குடி,
சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படை போலீசார் செட்டிநாடு போலீஸ் சரகம் கொத்தமங்கலம் அருகே உள்ள ஒரு குடோனில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 650 ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கூறப்பட்ட 3 இருசக்கர வாகனங்களையும், ஒரு சரக்கு வாகனத்தையும் கைப்பற்றி அங்கிருந்த வேலு என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் கூறிய தகவலின் பேரில் மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த ரேஷன் அரிசி மூடைகள் பல்வேறு இடங்களில் இருந்து கடத்தி வரப்பட்டதா அல்லது சமீபத்தில் காளையார் கோவில் பகுதியில் ரேஷன் கடைகளிலிருந்து திருடப்பட்ட ரேஷன் அரிசி மூடைகளா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story